சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் முதல் விமர்சனம- படம் எப்படி உள்ளது
அயலான் திரைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான்.
வரும் 12ம் தேதி ரிலீஸாகும் அயலான் படத்திற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
கிராமத்து பின்னணி கதை, காதல் கதை என மாறிமாறி நடித்துவந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் முதன்முறையாக ஒரு படம் நடித்துள்ளார்.
ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் ஏலியன்ஸை பின்னணியில் வைத்து உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
பட விமர்சனம்
இந்தியாவில் விவசாயத்தை சீரழிக்க வில்லன் கும்பல் ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது, அது சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடைய பின் வில்லன்களின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்ததா என்பது தான் கதையாம்.
மேலும் சிவகார்த்திகேயனும் பூமிக்கு வந்த ஏலியனுடன் சேர்ந்து வில்லன்களுடன் மோதுகிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதை செம்ம ஜாலியான என்டர்டெயினிங் படமாக உருவாகியுள்ளாராம் ரவிக்குமார்.
அயலான் படத்தின் முதல் பாதி சுமாராக சென்றாலும் இடைவேளைக்குப் பின்னர் மிரட்டலாக உள்ளதாம். இதனால் இரண்டாம் பாதி தாறுமாறாக இருக்கிறது என விமர்சனம் வந்துள்ளது.