தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்.. அசுர வளர்ச்சி
சிவகார்த்திகேயன் - தனுஷ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவருடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் தனுஷ்.
தனுஷின் தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படம், சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள திரைப்படம் டான்.
அசுரன் - டான்
இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 78 தாண்டி வசூல் செய்து வருகிறது. கூடிய விரைவில் ரூ. 100 கோடியை எட்டி விடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ரூ. 78 கோடியை கடந்த்ததன் முலம் தனுஷின் அசுரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை சிவகார்த்திகேயனின் டான் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.