டாப் 3ல் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.. முன்னணி நடிகர் கூறிய விஷயம்
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படமும் வசூலில் ரூ. 100 கோடி வசூல் செய்திருந்தது.
டாப் 3ல் வந்து விட்டார்
தொடர்ந்து வசூலில் மாஸ் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யா சமீபத்திய பேட்டியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதில் " சில படங்களிலுக்கு முன் தமிழ் சினிமாவில் நான்காவது, ஐந்தவது இடத்தில் இருந்த சிவகார்த்திகேயன், டான் படத்திற்கு பிறகு டாப் 3க்கு வந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri