சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய துரோகம், சொன்னால் குழந்தைகள் பாதிப்பார்கள்.. இமான் பகீர்
இசையமைப்பாளர் இமான் தற்போது சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் பற்றி கூறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கெரியரில் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தவர் டி.இமான். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி நம்ம வீ ட்டு பிள்ளை வரை சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்கள் இமான் கொடுத்து இருக்கிறார்.
சமீப காலமாக அவர்கள் எந்த புது படத்திற்கும் கூட்டணி சேராமல் இருக்கின்றனர். அதற்கான காரணம் என்ன என சமீபத்திய பேட்டியில் இமான் தெரிவித்து இருக்கிறார்.

ப்ரீ புக்கிங்கில் விஜய்யின் லியோ எந்தெந்த இடத்தில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?- மொத்த கலெக்ஷன்
மிகப்பெரிய துரோகம்
சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.
"அந்த துரோகம் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன், அவர் என்ன பதில் சொன்னார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு குழந்தைகள் எதிர்காலம் தான் காரணம்".
You May Like This Video

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
