நான் திடீர் தளபதியா.. சிவகார்த்திகேயன் மேடையிலேயே கொடுத்த பதில்
சிவகார்த்திகேயன் தளபதி விஜய் உடன் GOAT படத்தில் நடித்து இருந்தார். அவரிடம் இருந்து துப்பாக்கியை சிவகார்த்திகேயன் வாங்குவது போல காட்சி இருந்ததால் அடுத்து SK தான் தளபதி என பேச்சுகள் எழுந்தது.
விஜய் அரசியலுக்கு போவதால் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கிறார் எனவும் பேசப்பட்டது. அதன் பிறகு குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் சிவகார்த்திகேயனை பலரும் விமர்சித்தனர். அதற்கு இன்று நடந்த மதராஸி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பதில் கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அண்னன் அண்ணன் தான்
மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் "அண்னன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். அப்படி நினைத்து இருந்தால் அவரும் துப்பாக்கி கொடுத்து இருக்க மாட்டார், நானும் அப்படி நினைந்திருந்தால் வாங்கி இருக்க மாட்டேன்."
"விஜய் ரசிகர்களை பிடிக்க பார்க்கிறேன் என சொல்கிறார்கள். ரசிகர்களை பிடிக்க முடியாது, சம்பாதிக்கணும்" எனவும் சிவகார்திகேயன் கூறி இருக்கிறார்.