விஜய்யுடன் பாக்ஸ் ஆபிஸில் மோதப்போகும் சிவகார்த்திக்கேயன்.. 2026ல் சம்பவம் காத்திருக்கு
ஜனநாயகன்
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இதுவே விஜய்யின் கடைசி படம் ஆகும். இப்படத்தை முடித்த கையோடு அரசியலில் முழுமையாக களமிறங்கவுள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தை, கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படம் இந்த ஆண்டு வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 2026 பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் படம் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதே நாளில் மற்றொரு நடிகரின் படமும் வெளிவரவுள்ளது என தகவல் கூறப்படுகிறது.
ஜனநாயகன் vs பராசக்தி
அது வேறு யாருடைய படமும் இல்லை, சிவகார்த்திகேயனின் பராசக்தி தான். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தை 2026 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறார்களாம்.
இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
