ரஜினி, அஜித், விஜய்யை நெருங்கும் சிவகார்த்திகேயன்.. இது வேற லெவல்
தொகுப்பாளராக இருந்து தமிழ் திரையுலகில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
இப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை தேடி தந்தது.
மேலும் சமீபத்தில் வெளியாகியிருந்த டாக்டர் திரைப்படமும் விரமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
இப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படமாக அமைந்தது.
இந்நிலையில் 50% சதவீத இறக்கைகளுடன் வெளியான இப்படமா, காரைக்காலில் குறிப்பிட்ட ஒரு திரையரங்கத்தில் ரூ. 20 லட்சம் வசூல் செய்துள்ளது.
அதே போல் 50% சதவீத இருக்கையுடன், வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரூ. 24 லட்சம் அதே திரையரங்கில் வசூல் செய்துள்ளது.
மாஸ்டர் படம் சோலோ ரிலீசாக வெளியானது. ஆனால், டாக்டர் படம் வெளியான அடுத்த 25 நாட்களில் அண்ணாத்த படம் வெளியானது.
இதனால் தான் டாக்டர் வசூல் குறைந்தது என்றும், இல்லையென்றால் மாஸ்டர் படத்தின் வசூலை டாக்டர் படம் முந்தியிருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இதனையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, ரஜினி, அஜித், விஜய்யின் டாப் நடிகர்கள் என்ற அந்தஸ்தை சிவகார்த்திகேயன் நெருங்கி கொண்டே இருக்கிறார் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றனர்.