சிவகார்த்திகேயனின் Doctor முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா?- வெளிவந்த விவரம்
இளம் இயக்குனர் நெல்சன் கை வண்ணத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் Doctor.
காலை ஷோ முதல் படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் நன்றாக தான் வந்துகொண்டிருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த திரையரங்குகளை டாக்டர் திரைப்படம் விழிக்க வைத்துவிட்டது என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
படத்திற்கான புக்கிங் எல்லாமே அமோகமாக இருந்தது. தற்போது இதுவரை டாக்டர் திரைப்படத்திற்கு முதல் நாள் செய்யப்பட்ட டிக்கெட் விற்பனை வைத்து பார்த்தால் படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு அமோகமான டிக்கெட் புக்கிங் நடந்துள்ளதாம்.
#Doctor day 1 looks like 10 crore+ gross opening worldwide. EXTRAORDINARY Ticket bookings.
— LetsOTT GLOBAL (@LetsOTT) October 9, 2021