தமிழகத்தில் மட்டும் இந்த வாரத்தில் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலிக்குமா?
சிவகார்த்திகேயன் தொட்டது எல்லாம் வெற்றி தான் என்ற கொண்டாட்டத்தில் உள்ளார். அவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான டாக்டர் திரைப்படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மாஸ் வசூல் செய்தது.
அவரது திரைப்பயணத்தில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றது.
தற்போது அந்த வரிசையில் டான் திரைப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆன 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வரை வசூலிக்க படத்தை தயாரித்த லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வசூல் நிலவரத்தை வெளியிட்டார்கள்.
தமிழகத்தில் டான்
தமிழகத்தில் முதல் வார முடிவில் டான் திரைப்படம் ரூ. 22.85 கோடி வசூலித்த படம் மொத்தமாக இதுவரை ரூ. 70.85 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார முடிவில் படம் தமிழகத்தில் ரூ. 75 கோடி வரை வசூலை எட்டும் என கணக்கிடப்படுகிறது.
லீக் ஆன நயன்தாரா - விக்கி திருமண அழைப்பிதழ்! திருப்பதி இல்லை.. திருமணம் இந்த இடத்தில் தான்