விஜய், அஜித்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்.. வசூல் வேட்டை நடத்தும் டான்
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னர்களாக திகழ்ந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்.
இவர்களுடன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் மற்றும் வலிமை ஆகிய இரு திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்தது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.
டான் வசூல் வேட்டை
மேலும், இதுவரை பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை எட்டும் என்று தெரிவிக்கின்றனர்.
இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படமும் ரூ. 100 கோடி வசூல் செய்திருந்தது.

தொடர் வசூல் வெற்றியின் காரணாமாக தற்போது வசூல் மன்னர்களாக திகழ்ந்து வரும் விஜய், அஜித் இருவரையும் சிவகார்த்திகேயன் நெருங்கி வருகிறார் என்று திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri