வெள்ள நிவாரணத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பெரிய தொகை! எவ்வளவு தெரியுமா?
சென்னை நகரம் மிக்ஜாம் புயலால் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கும் நிலையில் மக்களுக்கு உதவும் வகையிவ் பல்வேறு பிரபலங்களும் உதவி அளித்து வருகின்றனர்.
விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் மூலமாக நேரடியாக மக்களுக்கு உதவும் நிலையில், சிலர் முதலைச்சரின் நிவாரண நிதிக்கு தங்கள் உதவி தொகையை அனுப்பி வருகின்றனர்.
10 லட்சம் கொடுத்த SK
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ருபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக கொடுத்திருக்கிறார்.
அதை போட்டோவுடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.… pic.twitter.com/LieFhGwO31
— Udhay (@Udhaystalin) December 10, 2023

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
