சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி திரைப்படம் ! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர்.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி, இன்றுவரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்துள்ளது.
படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி 25 வது நாளில் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இதோ அந்த மாஸ் போஸ்டர்..
Entering the 25th Day with a bang! Your favourite entertainer #DOCTOR joins the 100 crore club?
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
Thank you for the overwhelming support and love. You made this happen ♥️ #DOCTORHits100Crs #MegaBlockBusterDOCTOR @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl pic.twitter.com/pj2wkTkm7G