ரஜினி, விஜய், அஜித் மூவராலும் முடியாத விஷயத்தை செய்து காட்டிய சிவகார்த்திகேயன் !
வரவேற்பை பெறாத முன்னணி நடிகர்களின் படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று முக்கிய நடிகர்களின் திரைப்படங்களின் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெவ்வேறு மாதங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த மூன்று திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் இந்த மூன்று திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை, மற்ற மொழி திரைப்படங்கள் கூட இங்கு புதிதாக வசூல் சாதனைகளை செய்திருந்தது.

சாதித்து காட்டிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே இவர்களால் செய்ய முடியாத சாதனை படைத்திருக்கிறார். ஆம், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் திரையரங்கில் வெளியாகி இரண்டு பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளது சிவகார்த்திகேயன் மட்டுமே.
கடந்த அக்டோபர் மாதம் டாக்டர் திரைப்படம், இம்மாதம் டான் திரைப்படம் என அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ்நாட்டில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் ! மிரளவைக்கும் டான் பட வசூல்..