வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எந்த நாட்டில் தெரியுமா?
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் தனது திறமையால் நுழைந்து இப்போது முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்கிறார். சின்னத்திரையில் டூ வெள்ளித்திரையில் களமிறங்கியவர் இப்போது சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் உயர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மதராஸ் படம் வெளியானது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும், நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
வெளிநாடு
பராசக்தி படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்த சொந்த வாழ்க்கை பற்றிய தகவல் வலம் வருகிறது.
அதாவது சிவகார்த்திகேயன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும் குடும்பத்துடன் அங்கே செட்டில ஆக இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஏற்கெனவே அஜித் மற்றும் மாதவன் துபாயில் வீடு வாங்கியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனும் வீடு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.