நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி.. கிரிக்கெட் வீராங்கனை நெகிழ்ச்சி
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 மற்றும் SK25 படமான 'பராசக்தி'ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
வீராங்கனை நெகிழ்ச்சி
இந்நிலையில், கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனை சஜனா, நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "2018 வயநாடு வெள்ளத்தின்போது எனது வீடு அடித்துச் செல்லப்பட்டது. அதில் நான் வாங்கிய கோப்பைகள், மெடல்கள், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் சென்று விட்டது.
அப்போது, சிவகார்த்திகேயன் அண்ணா எனக்கு போன் செய்து நலம் விசாரித்து எனக்கு எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் எனக்கு புதிதாக ஒரு ஸ்பிக்ஸ் வேண்டும் என்றேன். அடுத்த ஒரே வாரத்தில் எனக்கு புதிய ஸ்பிக்ஸ் கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
