அஜித் வைத்த தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்.. புகைப்படம் இதோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் நேற்று தீபாவளிக்கு வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்ட விஷயம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது. தனது நண்பரின் get together-காக சிவகார்த்திகேயன் சென்றிருந்த போது, அங்கு நடிகர் அஜித்தை சந்தித்ததாகவும், அவர் தன்னை புகழ்ந்து பேசியது குறித்து அமரன் இசை வெளியிட்டு விழா மேடையில் சிவா பேசியிருந்தார்.
அஜித் வைத்த விருந்து
இந்த நிலையில், தற்போது தீபாவளிக்காக நடிகர் அஜித் விருந்து வைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
