பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து பிரின்ஸ் படத்தின் ரிலீசுக்காக தயாராகி வருகிறார். சமீபத்தில் ட்ரைலர் வெளியான நிலையில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வெளிநாட்டு பெண்ணுடன் சிவகார்த்திகேயன் காதலில் இருப்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை. அக்டோபர் 21ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.
நடராஜன் வாழ்க்கை வரலாறு
இந்திய அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடராஜன் அவரை பற்றிய படத்திற்கு ஆரம்பத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றும், தற்போது அவர் ஒப்புக்கொண்டு இருப்பதால் தான் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வந்திருக்கிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் கனா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து இருப்பார். அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் கிரிக்கெட்டர் ஆக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவில் படு கவர்ச்சியான உடையில் ராஷ்மிகா! விஜய் தேவரகொண்டா எடுத்த போட்டோவா இது