சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்கல.. வதந்திக்கு முற்றுப்புள்ளி
தில் ராஜு
தெலுங்கு திரைத்துறையில் முன்னணி படங்களை தயாரித்தவர் தில் ராஜு . இவர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் வாரிசு ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் தில் ராஜுவிடம் " நீங்கள் நிறைய தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். தில் ராஜுவும் தமிழ் படங்களை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார் என பல தகவல் வெளியானது.

வதந்தி
இதைதொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்றும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளார் எனவும் தகவல் சில தினங்களுக்கு முன்பு பரவியது.
இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிய வந்துள்ளது. தெலுங்கு சினிமா பிரபலம் ஒருவர் இந்த விவரத்தை தெரிவித்து இருக்கிறார்.
The news that Siva Karthikeyan and director Harish Shankar are joining hands for a movie in the production of Dil Raju are absolutely no true.
— Vamsi Kaka (@vamsikaka) December 29, 2022
கிளாமரில் எல்லை மீறிய ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் போட்டோஷூட்