இதுதான் பிரச்சனை.. தமிழ் சினிமா 1000 கோடி தொட முடியாதது பற்றி சிவகார்த்திகேயன்
தெலுங்கு, ஹிந்தி என மற்ற சினிமா துறையில் வரும் படங்கள் எளிதாக 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவால் அப்படி ஒரு படத்தை கூட கொடுக்க முடியவில்லை என்கிற விமர்சனம் நீண்ட காலமாக இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் இது பற்றி தற்போது பேசி இருக்கிறார். 1000 கோடி வசூல் தமிழில் வராததற்கு என்ன காரணம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
டிக்கெட் விலை
பெங்களூரு, மும்பை போல டிக்கெட் விலை வைத்தால் ஜெயிலர் படம் 1000 கோடி இல்லை என்றாலும், எளிதாக 800 கோடி வசூலை கடந்திருக்கும்.
நம் படங்கள் வட இந்திய மார்க்கெட்டில் ஊடுருவினால் தான் இந்த பெரிய தொகையை எட்ட முடியும். நாம் 4 வார ஓடிடி டீல் போடுவது தான் பிரச்சனை.
4 வார ஓடிடி டீல் இல்லை என்றால் அமரன் படம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இன்னும் இரண்டு வருடங்களில் 1000 கோடி வசூல் மைல்கல்லை நிச்சயம் தமிழ் சினிமா எட்டும் என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri
