முதல் படம் மெரினா ஆடிஷனில் பொய் சொல்லி சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்: என்ன பொய் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் அவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார். நேற்று தான் அவர் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் நிறைவடைவதை கொண்டாடினர். அதற்காக அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அவரது முதல் படமான மெரினாவை இயக்கியது பாண்டிராஜ் தான். அந்த படத்திற்காக நடந்த அடிக்ஷன் பற்றி சிவகார்த்திகேயன் முன்பு ஒரு பேட்டியில் பேசியதை பற்றி பார்க்கலாம். அடிக்ஷன் நடந்தபோது உங்களுக்கு பைக் வீலிங் செய்ய தெரியுமா என இயக்குனர் கேட்க சிவகார்த்திகேயன் 'தெரியும், காலேஜ் படிக்கும்போது செய்திருக்கிறேன்' என சொல்லி இருக்கிறார்.
ஆனால் நிஜத்தில் அவருக்கு அதெல்லாம் தெரியாது. ஷூட்டிங் தொடங்க இன்னும் நாட்கள் இருக்கு அதற்குள் கற்றுக்கொள்ளலாம் என அவர் நினைத்தாராம், ஆனால் மறுநாளே ஷூட்டிங் என சொல்லி ஷாக் கொடுத்து இருக்கிறார் பாண்டிராஜ். அதனால் சிவகார்த்திகேயன் சிக்கிக்கொண்டார்.
ஆடிக்ஷன் சென்ற அதே நாளில் காஸ்டியூம் எல்லாம் எடுத்து மறுநாளே ஷூட்டிங் சென்றிருக்கிறார்கள்.