முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்
மாவீரன்
மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன்.
ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்து வாழும் ஒரு கோழை மக்களின் பிரச்சனைகளைத் தட்டிக் கேட்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை என்கின்றனர்.
படத்தை பார்த்த ரசிகர்களும் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்துள்ளனர், வசூலிலும் நல்ல வேட்டை படம் செய்யும் என்கின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
பிரின்ஸ் படம் சரியாக ஓடாததால் சிவகார்த்திகேயன் இந்த மாவீரன் படம் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் படம் முதல் நான் வசூலில் உலகம் முழுவதும் ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இனி வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்கின்றனர்.