சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்.. தவறான முறையில் பரப்பும் வதந்தி
டாப் ஹீரோ சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அஜித், விஜய்க்கு அடுத்து மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் தான் செய்து வருகிறார்.
100 கோடி வசூல்
டாக்டர், டான் என தொடர்ந்து இரு ரூ. 100 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகரும் ஆவர். அண்மையில் வெளிவந்த ப்ரின்ஸ் திரைப்படம் கூட சில நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும், தயாரிப்பாளருக்கு அப்படம் பல கோடி லாபத்தை மட்டுமே அள்ளி கொடுத்துள்ளது. ஏன், ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் தயாரிப்பாளருக்கு Table Profit-டாக அமைந்தது.
மாவீரன் பற்றி பரவும் வீண் வதந்தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனும், இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோய்விட்டதாக கடந்த சில நாட்களாக வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
வன்மத்தை கக்கும் கும்பல்
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் சில கும்பல் இப்படி வன்மத்தை கக்கி வருகிறார்கள். ப்ரின்ஸ் திரைப்படம் வெளிவந்த முதல் ஷோவில் இருந்து தவறான முறையில் விமர்சனத்தையும் பரப்பி வந்தார்கள். ஒருவர் கஷ்ட்டப்பட்டு மேலே வந்தால், இப்படி தான் வன்மத்தை கக்கி கீழே இருக்க பார்க்கிறார்கள்.
கைவிடாத ரசிகர்கள்
ஆனால், என்ன நடந்தாலும், தனக்கென்று மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சிவகார்த்திகேயனின் போரையும், புகழையும் அசைக்க முடியாத வகையில் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாங்கி பிடித்துள்ளார்கள். இதனால், மாவீரன் படப்பிடிப்பு நின்றுபோய்விட்டதாக யாரும் தவறான செய்தியை கேட்டு நம்ப வேண்டாம்.
லவ் டுடே திரைவிமர்சனம்

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
