ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா?
மதராஸி
சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சாதித்து காட்டியவர்.
ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் லிஸ்டில் அடுத்து இருப்பவர்கள் தான் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்.
அப்படி முன்னணி நாயகனாக கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் மதராஸி.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாரான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து கலக்கிய சிவகார்த்திகேயன் இப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோ என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் கலவையான விமர்சனங்கள் தான் வந்தது.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை படம் மொத்தமாக ரூ. 85 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.