3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சிவகார்த்திகேயன் மதராஸி வசூல் எவ்வளவு தெரியுமா?
மதராஸி படம்
தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப் படம் கொடுத்தவர் நடிகரோ, இயக்குனரோ அடுத்த யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் இருக்கும்.
அப்படி அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்தார்.
சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் இணைந்து நடிக்க மதராஸி என்ற திரைப்படம் வெளியானது, படத்திற்கு அனிருத் தான் இசை.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆனது.
பாக்ஸ் ஆபிஸ்
மதராஸி திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 35 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்திருப்பதால் வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.