மாஸ்டர் விஜய் கெட்டப்-ல் சிவகார்த்திகேயன்! வெளியானது ப்ரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு போஸ்டர்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கத்தில் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
ப்ரின்ஸ்
மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் ப்ரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். இம்மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் போல, சிவகார்த்திகேயன் ஸ்கூல் டீச்சராக போஸ் கொடுத்திருக்கிறார்.
இதோ அந்த மாஸ் போஸ்டர்
பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல்