நடிகர் சூரியை காண ஓடி வந்த சிவகார்த்திகேயன்.. நெகிழ்ச்சியான வீடியோ இதோ
சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மாற்றியுள்ளது.
அதன்பின், இவர் நடித்த கருடன் மற்றும் கொட்டகாளி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நெகிழ்ச்சியான வீடியோ
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சூரியை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவை சூரி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.