இளையராஜாவை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. எதற்கு தெரியுமா?வைரலாகும் புகைப்படங்கள்
இளையராஜா
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக வலம் வருகிறார். தற்போது வரும் 8ஆம் தேதி லண்டனில் அவரது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளார் இளையராஜா. அதற்கு பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எதற்கு தெரியுமா?
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
35 நாட்களில் உருவாக்கப்பட்ட சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றுகிறார் இளையராஜா. அது ஆசியாவிலேயே யாரும் செய்யாத ஒரு சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி யாழ் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.