சிவகார்த்திகேயனின் மதராஸி பட OTT விநியோகம்.. எத்தனை கோடி தெரியுமா?
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விட்யுத் ஜம்முவால், பிஜு மேனன் இணைந்துள்ளனர்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியில் செப்டம்பர் 5 ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எத்தனை கோடி?
இந்நிலையில், இப்படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் ரூ. 23 கோடிக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
