சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெறித்தனமான அப்டேட்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23வது படம் உருவாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் 25வது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு படக்குழுவினர் அறிவித்தனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. SK25 படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், SK25 அதாவது 'பராசக்தி' படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan