வெளிவந்தது சிவகார்த்திகேயனின் SK25 படத்தின் டைட்டில்.. வெறித்தனமான அப்டேட்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23வது படம் உருவாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் 25வது படத்திற்கான அறிவிப்பை சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்தனர்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், SK25வது படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை உறுதி செய்யும் விதமாக 1நிமிடம் 50 வினாடிகள் கொண்ட டைட்டில் டீசர் விரைவில் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
