சிவகார்த்திகேயனின் SK 23 படத்தின் டைட்டில் இதுவா?.. வெறித்தனமான அப்டேட்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது எஸ்.கே.23 மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23 படம் டைட்டில் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், சிவகார்த்திகேயனின் 25 - வது படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், எஸ்.கே.23 படத்திற்கு 'சிகரம்' என பெயரிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்பில் 1981-ம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.
