சிவகார்த்திகேயனின் மதராஸி படம்.. தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி அப்டேட்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், சிவகார்த்திகேயன் மதராஸி படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, படத்தின் இறுதிக்கட்ட காட்சி இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக படக்குழுவினர் இலங்கைக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் சுதீப் எலாமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த படமானது துறைமுகம் கடத்தல் பின்னணியில் உருவாகி வருவது போல் தோன்றுகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
