எதிர்நீச்சல் அடி வெற்றியை புடி.... சாதித்து காட்டிய சிவகார்த்திகேயன்
சின்னத்திரை வெள்ளித்திரையினர் ஏளனமாக பார்க்கும் ஒரு துறை. காரணம் அந்த காலத்தில் இரண்டிற்கும் நடிப்பதில் பெரிய வேறுபாடு இருந்தது.
இப்போதும் சில இதுபோன்று இருக்கிறது ஆனால் முந்தைய காலம் போல் இல்லை என்று தான் கூற வேண்டும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பற்றி பேசுகிறோம். அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சாதித்த பிரபலங்களில் சிவகார்த்திகேயனும் ஓருவர்.
கலக்கப்போவது என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி உள்ளே வந்தவர் அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், நடன கலைஞராகவும் ஒரு நிகழ்ச்சியில் போட்டிபோட்டார்.
இடையில் முகப்புத்தகம், Identity, Kurahi 786, 360 போன்ற குறும்படங்களில் நடித்தார். பின் பாண்டிராஜ் இயக்கிய மெரினா என்ற படம் மூலம் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
பின் அடுத்தடுத்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு 3, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன.
எதிர்நீச்சல் (2013)
குஞ்சிதபாதம் (ஹரிஷ்) என்ற பெயரில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்திற்கு முன் சிவகார்த்திகேயன் மெரினா, 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்திருப்பார்.
ஆனால் எதிர்நீச்சல் படம் அவருக்கு சினிமாவில் பெரிய ரீச் கொடுத்தது. துரை செந்தில்குமார் இயக்க அனிருத் இசையமைத்த இப்படம் சிவகார்த்திகேயனின் ஹிட் லிஸ்டில் உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த இப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட். இதுவும் காதல், காமெடி, குடும்பம், சென்டிமென்ட் என படம் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.
மான் கராத்தே (2014)
திருகுமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா நடிப்பில் வெளியான ஒரு படம். அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படமும் செம ஹிட் லிஸ்டில் உள்ள படம் தான். இதில் சிவகார்த்திகேயன் பாக்சராக படத்தின் காட்சியில் சண்டையிட்டு அசத்தியிருப்பார்.
ரஜினிமுருகன் (2016)
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சூரி, கீர்த்தி சுரேஷ் கூட்டணி வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். இதுவும் கிராமத்து பின்னணி, குடும்பம், காதல், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக அமைந்த ஒரு திரைப்படம். ரூ. 22 கோடியில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 68 கோடி வரை வசூலித்துள்ளது.
ரெமோ (2016)
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம். அனிருத் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படத்தில் முதன்முறையாக பெண் வேடம் போட்டு நடித்தார் சிவகார்த்திகேயன்.
அதில் அவர் சக்சஸ் ஆனார், ரூ. 35 கோடியில் தயாரான இப்படம் ரூ. 76 கோடி வரை வசூலித்திருந்தது.
நம்ம வீட்டு பிள்ளை (2019)
பாண்டிராஜ் இயக்கிய இப்படம் அண்ணன்-தங்கை சென்டிமென்ட்டை உணர்த்தும் ஒரு திரைப்படம். 2019ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் பெரிய அளவில் புரொமோஷன் செய்தார்கள். ரூ. 40 கோடியில் தயாரான இப்படம் ரூ. 70 கோடி வரை வசூலித்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படமான டாக்டரும் நல்ல ஹிட் தான். இப்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டான் திரைப்படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். இந்த திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக இருக்கிறது.