சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளிவந்த புது அப்டேட்
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கடந்த வாரம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
சொல்லப்போனால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம் அமரன் செய்து வருகிறது.
ரிலீஸ்
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவரது 23 - வது படத்தில் நடித்து வருகிறார். ஏ. ஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிட இயக்குனர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தை இயக்கி வருவதால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் 23 - வது படத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் முருகதாஸ் தீவிரம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
