ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா, இல்லையா? ரஜினியே எடுத்த முடிவு
சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என முன்பிருந்தே தகவல் பரவி வந்தது.
ஜெயிலரில் சிவகார்த்திகேயன்?
ரஜினியின் அடுத்த படமான ஜெயிலரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என தகவல் வந்தாலும், அது பற்றி உறுதியான அறிவிப்பு எதுவும் வரவில்லை.
நெல்சன் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த செய்தி உண்மையாக அதிக வாய்ப்பிருப்பதாக ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்தனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல்களின்படி சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடிக்கவில்லையாம்.
சிவகார்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிப்பதை ரஜினி விரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதற்குமுன் காலா படத்தில் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு கேட்டபோதே ரஜினி வேண்டாம் என்றாராம். அதே பதிலை தான் இப்போது சிவகார்த்திகேயனுக்கும் அவர் கூறி இருக்கிறாராம்.
