தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூலிப்பதற்கு காரணம்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்
மதராசி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக சிக்கந்தர் படம் வெளிவந்தது. ஆனால், இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயனை முருகதாஸ் இயக்கியுள்ளார்.
மதராசி படத்தில் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திலிருந்து டிரைலர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது.
வரும் செப்டம்பர் 5ம் தேதி அதாவது இன்னும் சில தினங்களில் வெளியாகும் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
காரணம்?
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த மதராசி படவிழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ருக்மணி வசந்த் உள்ளும், புறமும் அழகானவர்.
பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். போன்ற தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூல் சாதனையை அசால்டாக செய்தன.
விமர்சனங்களை கடந்து தெலுங்கு படங்கள் வசூலில் சாதித்து வருகிறது. அடுத்தடுத்து தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூலிப்பதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் தான்" என்று தெரிவித்துள்ளார்.

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
