ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா?
பராசக்தி
சுதா கொங்கரா, தனது தரமான படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதை வென்றவர்.
இவர் இப்போது இந்திய சினிமா வியந்து பார்க்கும் அளவிற்கு பராசக்தி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 60களில் நடந்த மாணவர் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் 2026 பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 10ம் தேதி தணிக்கை குழு சான்றிதழ் பெற பல கட்களுடன் வெளியாகி இருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
தற்போது படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டது. படத்தை தமிழக ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது.
படம் ஒரு வாரத்தில் மொத்தமாக ரூ. 75 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan