சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?... வெளிவந்த தகவல்
பராசக்தி படம்
சிவகார்த்திகேயன், தென்னிந்திய சினிமா கொண்டாடும் இளம் நடிகர்களில் டாப்பில் இருக்கும் ஒருவர்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பில் திறமைகளை வெளிக்காட்டி முன்னேறியவர். இவரை தங்களது வாழ்க்கையில் உதாரணமாக வைத்திருப்பவர்கள் பலர் உள்ளனர்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியாகி இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
2026, பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 10ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது. ஹிந்தி எதிர்ப்பு தொடர்பாக மாணவர்கள் நடத்தியி போராட்டம் குறித்து பேசும் படமாக பராசக்தி அமைந்தது. கதை முக்கியமானது என்றாலும் திரைக்கதை இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன.

பாக்ஸ் ஆபிஸ்
படத்தில் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயனை தாண்டி ஜெயம் ரவி நடிப்பு படத்தில் அதிகமாக பேசப்பட்டது என்றே கூறலாம். திரையரங்குகளில் வெளியாகி ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ள இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து தகவல் வந்துள்ளது.
இப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் News Lankasri
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
ஜென்சன் ஹுவாங் காதல் விவகாரம்... ஏற்றுமதித் தடைகளை மீறி Nvidia சிப்களை வாங்கிக் குவித்த சீனா News Lankasri