பல கோடி வியாபாரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பு நிறுவனம்- ஆனால்?
பராசக்தி
அமரன் பட வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் நடித்தார்.
அப்படத்தை முடித்த கையோடு தற்போது சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீலீலா நாயகியாக நடித்து வருகிறார்.
இலங்கையில் நடக்கும் படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்திக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
வியாபாரம்
படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்க இன்னொரு பக்கம் வியாபாரம் சூடு பிடிக்க நடக்கிறது.
2026 பொங்கலுக்கு வெளிவரும் படம் பராசக்தி, இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் தளத்தில் விற்க படக்குழு முயற்சி செய்கிறார்களாம்.
பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை சுமார் ரூ. 50 கோடி வரை பேரம் பேசியதாகவும் அதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 45 கோடி வரை வாங்க முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் படக்குழு தாங்கள் சொல்லிய விலையில் உறுதியாக உள்ளதால் ஓடிடி வியாபாரம் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது.