விஜய் சேதுபதி உடன் சேர்ந்து நடிக்க தயார்! ஆனால்.. : சிவகார்த்திகேயன் Exclusive பேட்டி
சிவகார்த்திகேயன் பேட்டி
நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து அதன்பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி தற்போது முன்னணி நடிகராக வளர்த்திருக்கிறார். அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்திருக்கும் பிரின்ஸ் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21ம் தேதி) ரிலீஸ் ஆகிறது.
தற்போது சினிஉலகத்திற்கு சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் exclusive பேட்டியில் தானும் கரெண்ட் ட்ரெண்டில் multistarrer படங்கள் நடிக்க தயார் என கூறி இருக்கிறார்.
ஆரம்பகட்டத்தில் நான் சோலோ படங்கள் தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். அப்போது தான் என்னுடைய பாசிட்டிவ் நெகடிவ் எல்லாம் தெரியும் என கூறினார் சிவகார்த்திகேயன். 'விஜய் சேதுபதி உடன் சேர்ந்து எப்போது நடிக்க போகிறீர்கள்' என கேட்டதற்கு..

மல்டிஸ்டாரர் படங்கள்
'அவர் performanceக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் நடிக்கிறார், நான் entertainmentக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்கிறேன். இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் இரண்டும் கலந்த ஒரு சிறப்பான கதையாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் நடிக்க தயார் என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
விஜய் சேதுபதி அதில் நடிக்க எப்போதும் தயாராக தான் இருப்பார் என நினைக்கிறன் எனவும் கூறி இருக்கிறார்.
ரச்சிதா கணவரை பிரிய இதுதான் காரணம்! பிரச்சனை பற்றி அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை