டான் படத்தில் சிவகார்திகேயன் ரோல் இதுதான்! அப்போ காமெடி கலாட்டா தான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வந்த டாக்டர் படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது டான், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது.
சிபி சக்ரவர்த்தி என்ற புது இயக்குனர் இயக்கத்தில் தயாராகி வரும் டான் படம் வரும் மே 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதனால் படத்தின் விளம்பர பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பிராங்க்ஸ்டர் ரோலில் நடிக்கிறாராம். மேலும் இது கல்லூரி கதை என்பதால் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறார். தற்போது இணையத்தில் prank வீடியோக்கள் தான் ட்ரெண்டு.. அப்படி ஒரு ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து உள்ளார். டாக்ட்ர் படத்திற்கு பிறகு மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
