டான் ரிலீஸ் தேதி? சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
சிவகார்திகேயனின் டாக்டர் படம் நல்ல வரவேப்பை பெற்று குறிப்பிடத்தக்க வகையில் வசூல் ஈட்டியது. இந்த படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டுக்கு ஒரு உத்வேகம் கொடுத்து இருக்கிறது.
அடுத்து டான் என்ற படத்தில் நடித்து உள்ளார் சிவகார்த்திகேயன். அந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைகா நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரிக்கின்றன. ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது டான் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி 17ம் தேதி அது ரிலீஸ் ஆக உள்ளதாக தாவல் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பது தான்.
அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.