மதராஸி படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மதராஸி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக சிக்கந்தர் படம் வெளிவந்தது. ஆனால், அப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தினால் படுதோல்வியை சந்தித்தது. முருகதாஸ் படமா இது என்கிற கேள்வியும் எழுந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதராஸி படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக சிவகார்த்திகேயனை முருகதாஸ் இயக்கியுள்ளார். மேலும் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திலிருந்து டிரைலர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் சம்பளம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 40 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இந்த நிலையில், மதராஸி திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தான் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் சிவகார்த்திகேயன் மதராஸி படத்திற்காக வாங்கியுள்ளாராம்.
மதராஸி படம் வெளிவந்து லாபம் பெற்ற பின், அந்த லாபத்தில் இருந்து சம்பளத்தை வாங்கிக்கொள்வதாக profit sharing முறையை இப்படத்தில் அவர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.