நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. தற்போதைய நிலை இதுதான்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களால் பூர்த்தி செய்யவில்லை.
இதை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இதுமட்டுமின்றி புதிய படம் ஒன்றையும் கைவசம் வைத்துள்ளாராம். ஆம், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்திற்கு பின் மற்றொரு புதிய தமிழ் திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.
தற்போதைய சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் ரூ. 27 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சிவகார்த்திகேயன் கேட்டுள்ளாராம்.

ஆனால், இறுதியில் ரூ. 27 கோடி சம்பளம் தான் உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri