அயலான் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் KPY பாலாவை திட்டிய சிவகார்த்திகேயன்- என்ன ஆனது?
சிவகார்த்திகேயன்
தமிழ் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் மனதை வென்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
பின் 3, மெரினா என கிடைத்த பட வாய்ப்புகளில் நடிக்க இப்போது நாம் நாயகனாக வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். வரும் பொங்கல் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அயலான் படம் 6 வருட தாமதத்தில் வெளியாக உள்ள நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் படு சூப்பராக நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தனது மொத்த குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
திட்டிய சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் அயலான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் KPY பாலாவை சிவகார்த்திகேயன் திட்டியுள்ளார்.
அதாவது கனா மற்றும் அயலான் படங்களில் நடிக்க வைக்க பாலாவை படக்குழு அணுகியுள்ளனர், ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளாராம்.
இதனை சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில் கேட்க அதற்கு பாலா, அயலான் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் பேசவே பேசாது என்பதால் யோசித்தேன் என பாலா சொல்ல, நீ வாயை தொறந்தா மூடமாட்ட, உனக்கு எப்படி அந்த ரோல் செட்டாகும் என சொல்ல மீண்டும் நன்றி சொன்னார் பாலா.
உடனடியாக பேசிய சிவகார்த்திகேயன், நான் உன்னைதிட்டுறேன், பாராட்டவில்லை என சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
