மனச்சோர்வில் இருந்தேன், சிகிச்சையாக மாறியது அந்த விஷயம்.. ரகசியத்தை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராகவும், வசூல் நாயகனாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன், உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக முதன் முதலாக சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அமரன் படத்திற்கு அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவா.
அந்த விஷயம்
இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்று சிவகார்த்திகேயன் சில விஷயங்களை பேசியுள்ளார். அதில், " என்னுடைய தந்தையின் மரணம் வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியது.
மனச்சோர்வில், சினிமாவில் அறிமுகமாகி என் பணிகளை செய்து கொண்டிருந்த போது பார்வையாளர்களின் விசில்களும் அவர்களின் கைத்தட்டலும் தான் எனக்கு மிகச்சிறந்த மருந்தாக மாறியது" என்று அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.