பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. அடுத்த லெவல் உறுதி
தமிழ் திரையுலகில் தற்போது மிகப்பெரிய அளவில் மார்க்கெட் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இதுமட்மின்றி, அயலான் மற்றும் டான் ஆகிய படங்களில் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களான, வி கிரியேஷன் மற்றும் சத்யஜோதி தயாரிக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று கூறப்படுகிறது.
வி கிரியேஷன் தயாரிப்பில் உருவான கபாலி, துப்பாக்கி, தெறி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அதேபோல் சத்யஜோதி தயாரிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படமும் வசூலில் பல சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், நடிகர் சிவகார்த்திகேயனின் லெவல், திரையுலகில் அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்று கூறி வருகின்றனர்.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri