அஜித்தின் ஹிட் பாடலை பாடும் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். துப்பாக்கியை புடிங்க சிவா என விஜய் சொன்னபிறகு அவர் தான் தமிழ் சினிமாவின் அடுத்த விஜய்யா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அவர் கெரியர் தற்போது உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது.
அமரன் வெற்றிக்கு பிறகு அவர் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஓ.. சோனா
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது நண்பர்கள் உடன் இருக்கும்போது அஜித்தின் வாலி படத்தில் வரும் ஹிட் பாடலான ஓ சோனா பாடலை பாடி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
. @Siva_Kartikeyan 😂❤️pic.twitter.com/ci9q3UMese https://t.co/qPOmWSRdG5
— Worldwide Thala Fans (@WorldwideThala) April 7, 2025