சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளிவந்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி
சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
எஸ்.கே. 20
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே. 20. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சத்யராஜ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் தேதி
மேலும், சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறதா என்று..