மூளை கம்மியாக இருப்பதால்தான் என்னால்... ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், மேடைகளில் எப்படி பேசுவார், எவ்வளவு கலகலப்பாக பார்வையாளர்களை சிரிக்க வைப்பார் என்பது நமக்கே தெரியும்.
அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது ரசிகர்கள் குறித்தும், அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

நடிகரின் பேச்சு
சென்னை வடபழனியில் Fanly எனும் பிரத்யேக செயலியின் அறிமுக விழா நடைபெற்றது, அதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
அதில் பேசும்போது, மூளை கம்மியாக இருப்பதால் தான் நடிகராக இருக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால் இயக்குனர்களை எல்லாம் தொல்லை செய்திருப்பேன். அது இல்லை என்பதாலேயே நடிகராக இருக்கிறேன் என்றார்.

மேலும் ரசிகர்களை பற்றி பேசும்போது, என்னை ஆராதிக்கும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம், அவர்கள் கடவுளையும் தாய் தந்தையையும் வழிபட்டால் போதும்.
என்னை ஒரு நண்பனாகவும், சகோதரராகவும் பார்க்கும் ரசிகர்கள் தான் எனக்கு வேண்டும், அதான் என் ஆசை. நானும் என் ரசிகர்களை குடும்பமாக தான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.